கூடலூர் அருகே அரசுப்பள்ளிக்கு குடிநீர் தொட்டி வழங்கல்

 

கூடலூர், ஜூலை 14: கூடலூர் ஒன்றியம் பாவனா நகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கூடலூர் ப்ளூ மவுண்டன் ரோட்டரி கிளப் சார்பில் இலவச குடிநீர் தொட்டி வழங்கப்பட்டது. பள்ளி மேலாண்மை குழுத்தலைவர் ரஞ்சிதா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் காஞ்சனா, பெற்றோர் சங்க நிர்வாகிகள் கனகா ரிஷான ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை பங்கஜாட்சி தலைமை வகித்தார். தேவர் ஷோலை பேரூராட்சி தலைவர் செல்வி வள்ளி, துணைத்தலைவர் யூனஸ்பாபு, வார்டு உறுப்பினர்கள் ஷாதிய செரின், கிரிஜா, ஷாஹினா, ரோட்டரி சங்க துணைத்தலைவர் யாசின் ஷெரிப், செயலாளர் கிருஷ்ணன், தினேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ரோட்டரி கிளப்தலைவர் தாமஸ் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அங்கன்வாடி ஆசிரியை, பெற்றோர்கள் கிராம மக்கள் பள்ளி மாணவர்கள் கலந்துக்கொண்டனர். முடிவில் இடைநிலை ஆசிரியை வாசுகி நன்றி கூறினார். ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில், மக்கள் தொகைப்பெருக்கத்தின் முக்கியப் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கூடலூர் எம்எல்ஏ பொன்.ஜெயசீலன் பேசினார்.

புளூ மவுண்டன் ரோட்டரி சங்க தலைவர் தாமஸ், வழக்கறிஞர் ஜைனுல் பாபு, அனு சினான், யாசீன் ஷெரிப் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பேசினர். இந்நிகழ்ச்சியில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டதுடன், மக்கள்தொகை பெருக்கத்தை எதிர்கொள்வது குறித்தும் தங்களின் பேச்சுத்திறனை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கம், பரிசுகளும் வழங்கப்பட்டன.

The post கூடலூர் அருகே அரசுப்பள்ளிக்கு குடிநீர் தொட்டி வழங்கல் appeared first on Dinakaran.

Related Stories: