டிஜெஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே பெருவாயலில் உள்ள டிஜெஎஸ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேற்று புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி, கல்லூரி மேலாண் இயக்குநரும் செயலாளருமான டி.ஜெ.ஆறுமுகம் தலைமையில் நடந்தது. டிஜெஎஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்று, முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்று பேசினார்.அப்போது,’பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், தங்கள் படிப்பை முடித்தவுடன் வேலை செய்து கொண்டே மேல்படிப்பை தொடரலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த இப்படிப்பை தேர்வு செய்த மாணவ-மாணவிகளுக்கு எனது பாராட்டுகள்.

கல்வி ஒன்றே மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்’ என்று அறிவுறுத்தினார். பின்னர், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், பாலிடெக்னிக் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவர்கள், துறைவாரியாக முதலிடம் பிடித்த மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.இதில் டிஜெஎஸ் பப்ளிக் பள்ளி தாளாளர் ஜி.தமிழரசன், இயக்குனர்கள் டி.தினேஷ், டாக்டர் ஏ.பழனி, நிர்வாக அதிகாரி எஸ்.ஏழுமலை, மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் ஞானப்பிரகாசம், துறைத் தலைவர் பகவதியம்மாள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் பெருவாயல் ராஜசேகர், ஆரம்பாக்கம் ஆறுமுகம், பூவலம்பேடு ஜோதிலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post டிஜெஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: