ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதனால் உலகக்கோப்பை தொடருக்கு முன்பே ஆசியக்கோப்பை தொடரை நடத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மும்முரம் காட்டி வருகிறது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசியக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய 2 நாடுகள் சேர்ந்து நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் இத்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம், ஆப்கானிஸ்தான் ஆகிய 6 நாடுகள் ஆசியக்கோப்பை தொடரில் விளையாட உள்ளது.

இதையடுத்து இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில் பல்வேறு சிக்கல் நீடித்து வரும் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்ற கருத்தை பிசிசிஐ முன்வைத்து வந்தது. தெற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம், அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என கூறியது.

இந்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்பதை
பிசிசிஐ நிர்வாகி அருண் துமல் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிகள் இலங்கையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டிக்கான இறுதி அட்டவணை ஜூலை 14ல் வெளியாகிறது.

The post ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது: பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: