தென்னை வளர்ச்சி வாரிய திட்டப்பணிகள் கள ஆய்வு அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நன்கொடைக்கான பணிகள் தொடக்க விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு நம் பள்ளி நம்ம ஊர் பள்ளி திட்டத்தில் பெங்களூரை சார்ந்த ஒயர்லெஸ் பிராட்காம் நிறுவனத்தின் மாஸ்டர் சிவக்குமார் மென்பொறியாளர் பள்ளியின் மேடைக்கான கூரை அமைத்தல் மற்றும் கழிவறைகள் பழுதுநீக்கம் பணிகளுக்காக நன்கொடையளித்துள்ளார். திட்டத்தின் பணிகளை பள்ளியின் மேலாண்மைக்குழு மூலம் செய்திட அனுமதி கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து நன்கொடையாளரின் தாயார் வானதி ஓய்வுபெற்ற ஆசிரியர் கல்லூன்றி வாழ்த்தி பணிகளை தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடாசலபதி தலைமை வகித்தார். ஊராட்சிமன்ற தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா, உறுப்பினர் கீதா மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பாண்டிமீனா, விஜயகுமாரி, ராசாத்தி, தினேஷ்குமார், மார்சிலின் சாந்தி, அலமேலுமங்கை, கோபிநாத், அமுதா, குணசேகரன், அலெக்ஸாண்டர், ஜெயகுமாரி, சத்துணவு அமைப்பாளர் கருணாநிதி, காந்திமதி, சாந்தி, சித்திரைசெல்வி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். பள்ளியின் மாணவர் தலைவி அட்சயா தனது நன்றியுரையில் தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டல் மூலம் கிடைக்கப்பெற்ற இந்த நன்கொடையானது வெயில் மழை பாதிப்பின்றி இனிவரும் நாட்களில் அமர்ந்து படிக்க விழா நடத்த மிகவும் உதவியாக இருக்கும். எங்களின் திறமையை உலகறிய செய்ய நல்வாய்ப்பாக அமையும் என்று நன்கொடையாளருக்கும் தமிழக முதல்வருக்கும் நன்றி கூறினார்.

The post தென்னை வளர்ச்சி வாரிய திட்டப்பணிகள் கள ஆய்வு அன்னப்பன்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நன்கொடைக்கான பணிகள் தொடக்க விழா appeared first on Dinakaran.

Related Stories: