சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட ம.பி முதல்வர்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்படுத்தப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலை கழுவிய முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளைஞரின் மீது பாஜ பிரமுகர் சிறுநீர் கழித்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜ பிரமுகரால் அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் தஷ்மத் ராவத்தை போபாலில் உள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்த முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அவரது பாதங்களை தண்ணீர் விட்டு கழுவினார். இளைஞரை அவமதிக்கும் வகையில் நடந்த சம்பவத்துக்காக அவரிடம் முதல்வர் வருத்தம் தெரிவித்ததோடு, மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இனி தஷ்மத் எனது நண்பர் என்றும் கூறி பழங்குடியின இளைஞரை முதல்வர் மகிழ்ச்சியடைய செய்தார்.

The post சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் காலை கழுவி மன்னிப்பு கேட்ட ம.பி முதல்வர் appeared first on Dinakaran.

Related Stories: