புழல் மத்திய சிறையில் கணினி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி

சென்னை: புழல் மத்திய சிறையில் கணினி பயிற்சி மையத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். சென்னை புழல், மத்திய சிறை-2ல் “கணினி பயிற்சி மையம்” சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைக்கப்பட்டது. இக்கணிப்பொறிகள் மூலம் புழல் மத்திய சிறையில் அனுமதிக்கப்படும் சிறைவாசிகளுக்கு கணினி வழி சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் எனவும், இதன் மூலம் சிறைவாசிகள் விடுதலைக்குப் பின்னர் அவர்களது வேலைவாய்ப்புக்கு வழி வகுப்பதுடன், அவர்கள் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருக்கவும், சிறைக்கு மீண்டும் வராமல் இருக்கவும் இப்பயிற்சிகள் பேருதவியாக இருக்கும் என சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை அமைச்சர் S.ரகுபதி தெரிவித்தார்.

இக்கணினி பயிற்சி மையம் 30 கணிப்பொறிகளுடன் வெளி நபர் பயிற்றுநர்களைக் கொண்டும், கணிப்பொறியில் தேர்ந்த சிறைவாசிகளைக் கொண்டும், சிறைவாசிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் S.சுதர்சனம், சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, சிறைத்துறைத் துணைத்தலைவர் (தலைமையிடம்) இரா.கனகராஜ், சென்னை சரக சிறைத்துறைத் துணைத்தலைவர் ஆ.முருகேசன் மற்றும் புழல், மத்திய சிறை-2 கண்காணிப்பாளர் இரா.கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post புழல் மத்திய சிறையில் கணினி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் ரகுபதி appeared first on Dinakaran.

Related Stories: