2024 யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜெர்மனியில் அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடக்கம்

ஜெர்மனி: ஜெர்மனியில் அடுத்த ஆண்டு நடைபெறும் யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன் தொடரில் புகழ் வாய்ந்த கலோன் அரங்கில் மட்டும் 5 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. கால்பந்து உலகில் புகழ் வாய்ந்தது யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் உலக கோப்பை போட்டிக்கு இணையாக பார்க்கப்படும் இத்தொடர் ஜெர்மனியில் அடுத்த ஆண்டு ஜூன் 14ம் தேதி முதல் 1 மாத காலம் அரங்கேற உள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மெகாத்தொடரில் பங்கேற்கும் தகுதியை 24 முன்னிலை அணிகள் பெற்றுள்ளன. லீக் மற்றும் நாகௌட் அடிப்படையிலான போட்டிகளில் 5 ஆட்டங்கள் 2000 ஆண்டுகள் பழமையான கலோன் நகரில் அதுவும் ரைன் நதிக்கரையில் அமைந்துள்ள கலோன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன. காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தையும் இங்கு ரசிகர்கள் கண்டுகளிக்க உள்ளனர். போட்டிக்காக இப்போதே கலோன் அரங்கில் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டன. கலோன் அரங்கம் இன்னிசை கச்சேரிகளுக்கு புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

The post 2024 யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்: ஜெர்மனியில் அடுத்தாண்டு ஜூன் மாதம் தொடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: