சர்வதேசபோதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி

தோகைமலை:கரூர்மாவட்டம் சிந்தாமணிபட்டி காவல்துறை மற்றும் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி சார்பாக சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கம் நிகழ்ச்சி எஸ்ஐ கனகராஜ் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர்நல்லதம்பி முன்னிலை வகித்தார் தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை எஸ்ஐ கனகராஜ் தொடங்கி வைத்தார் தொடர்ந்து தரகம்பட்டி கடைவீதி, பேருந்து நிலையம், மணப்பாறை கரூர்மெயின் ரோடு வழியாக கடவூர்ஒன்றிய அலுவலக வளாகத்தில் பேரணி நிறைவு பெற்றது. இந்த பேரணியில் போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது, போதை பொருட்களை ஒழிக்க வேண்டும், அறியாமையால் குடிப்பவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கி தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கோசங்களை எழுப்பியவாறு கையில் பதாதைகளை ஏந்தியபடி சென்றனர் இதேபோல் போதை பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல் வழிப்படுத்த நமது பங்களிப்பை முழுமையாக தரவேண்டும். போதை பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு அகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைபொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க நாம் ஒவ்வொருவரும் தமிழ்நாடு அரசுடன் துணை நிற்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் அனைவரும் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவதற்கு முன் வரவேண்டும் என்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். நிகழ்ச்சியில் சிந்தாமணிபட்டி காவல்துறையினர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

The post சர்வதேசபோதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: