திரிபுராவில் 75 கிராமங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்: மாநில அரசு முடிவு

அகர்தலா: திரிபுராவில் 75 எல்லைக் கிராமங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை வைக்க திரிபுரா அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி ஒன்றிய அரசு சுதந்திரதின அமிர்தப் பெருவிழாவை கொண்டாடி வருகிறது. இதனை நினைவுகூரும் விதமாக திரிபுராவில் 8 மாவட்டங்களில் உள்ள 75 எல்லைக் கிராமங்களுக்கு 75 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை சூட்ட மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக திரிபுராவை சேர்ந்த 75 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்கள், சுதந்திர போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பு ஆகிய விவரங்கள் தொடர்பான பட்டியலை மாநில அரசு தயார் செய்து வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிராமங்களுக்கு 75 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர் வைக்கும் நிகழ்வுக்காக பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திரிபுராவில் 75 கிராமங்களுக்கு சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்: மாநில அரசு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: