நலத்திட்ட உதவிகள் பெற அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்: தஞ்சை தொழிலாளர்துறை உதவி ஆணையர் (சமூக பாது காப்பு திட்டம்) உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் நலத்துறை சார்பாக அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற மற்றும் பதிவு பெறாத கட்டுமான தொழிலில் உள்ளவர்கள், பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தால் அந்த தொழிலாளர் குடும்பத்துக்கு உதவித்தொகையாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.மேலும் பெண் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆட்டோ டிரைவர் நலவாரியம் மூலமாக புதிய ஆட்டோ வாங்குவதற்கு மானியமாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் https://tnuwwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர் மழையால் நெல் கொள்முதல் பாதிப்பு

The post நலத்திட்ட உதவிகள் பெற அமைப்புசாரா தொழிலாளர்கள் இணையத்தில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: