குற்றவழக்குகளில் ஆடியோ – வீடியோ கிராபிக் முறையில் வாக்குமூலம் பதிவு: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை பாராட்டியது ஐகோர்ட் கிளை

காணாமல் போன செந்திலை கண்டுபிடிக்கக்கோரி அவரது மனைவி தொடர்ந்த மனுவில் தென்மண்டல ஐஜி உரிய விசாரணை நடத்துமாறு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று ஐகோர்ட் கிளை நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் முன் நடந்தது. அப்போது தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆஜராகி போலீசாரின் விசாரணை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், ‘இரட்டை கொலையில் தேடப்பட்ட செந்தில் கடந்த 2021ல் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி வரிச்சியூர் செல்வம் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஆடியோ – வீடியோ கிராபிக் முறையை பயன்படுத்தி குற்றவாளிகள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகிறது’ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தென்மண்டலத்தில் ஆடியோ – வீடியோ கிராபிக் முறையை அமல்படுத்திய தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை பாராட்டிய நீதிபதி, இம்முறையால் புலனாய்வு திறன் மேம்படுவதுடன், விசாரணை நேர்மையாக நடப்பதால், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர முடியும் எனக்கூறி விசாரணையை தள்ளிவைத்தார்.

 

The post குற்றவழக்குகளில் ஆடியோ – வீடியோ கிராபிக் முறையில் வாக்குமூலம் பதிவு: தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க்கை பாராட்டியது ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Related Stories: