உடையார்பாளையம் அரசு பள்ளியில் யோகா தினம்

 

ஜெயங்கொண்டம், ஜூன் 22: ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய யோகா தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் மனவளக்கலை மன்றம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு யோகா மற்றும் எளிய உடற்பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்வில் பள்ளி பொறுப்பு தலைமையாசிரியர் லெனின் தலைமை வகித்தார்.

உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா வரவேற்றார். கல்வி துறையில் துணை இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி ராசாத்தி ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் யோகா பற்றியும், எளிய உடற்பயிற்சி முறைகள், இதனால் ஏற்படும், உடல், மனம் சார்ந்த ஆரோக்கியம் பற்றியும், ஞாபகசக்தி அதிகரித்து படிப்பில் அதிக மதிப்பெண் எடுக்க முடியும் என்பதை எடுத்து கூறினார். மேலும், யோகா தின வாழ்த்துக்களையும் கூறினார். மேலும் மனவளக்கலை துணை பேராசிரியர்கள் புவனேஸ்வரி, வசந்தா, கிரிஜா, மாலதி, பெரியநாயகி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.

The post உடையார்பாளையம் அரசு பள்ளியில் யோகா தினம் appeared first on Dinakaran.

Related Stories: