மசினகுடியில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் வீடுகளை சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு

ஊட்டி, ஜூன் 18: மசினகுடியில் ஊரக வளர்ச்சி முகமை சார்பில், கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் வீடுகளை சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழு ஆய்வு செய்தது. மசினகுடி ஊராட்சி பகுதியில் ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில், நடைபெற்று வரும் பழங்குடியினர்களுக்கு பிரதான் மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ், தலா ரூ.2.78 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் 78 வீடுகள் கட்டும் பணிகளையும், சிங்காரவில் 150 மெகாவாட் திறனுள்ள பைக்காரா இறுதிநிலை புனல் மின் திட்டம் மின் உற்பத்தி நிலையத்தில், மின் உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதையும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக் கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை மற்றும் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.

ெதாடர்ந்து, தெப்பக்காடு யானைகள் முகாமில், ஆஸ்கர் விருது பெற்ற எலிபென்ட் விஸ்பரரர்ஸ், குறும்படத்தில் இடம் பெற்ற யானை ரகுவை வளா்த்த பொம்மன் மற்றும் பெள்ளி ஆகியோர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தொிவித்தனர். பின், யானைகள் முகாமில் உள்ள வளர்ந்து யானைகளுக்கு உணவுகளை வழங்கினர். ஆய்வின் போது, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் அருண், சட்டப்பேரவை (பொது கணக்கு குழு) இணைச்செயலாளர் தேன்மொழி, மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வாி, ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வகுமரன், தமிழ்நாடு மின்சார வாரியம் செயற்பொறியாளர் கருப்பைய்யா, கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மசினகுடியில் கட்டப்பட்டு வரும் பழங்குடியினர் வீடுகளை சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: