சென்னை: சம வாய்ப்பற்ற, சிபிஎஸ்இக்கு சாதகமான நீட் தேர்வை நீக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொருளாதார அடிப்படையில் வலிமையான குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் பள்ளிகள், பயிற்சி மையங்கள் என லட்சக்கணக்கில் செலவழிக்க முடியும். ஆனால், கிராமப்புற ஏழை மாணவர்கள் வாழ்வதற்கே வசதியின்றி தினமும் கூலி வேலை செய்து கொண்டே அரசு பள்ளிகளுக்கு சென்று படிக்கக் கூடியவர்கள். எதிரெதிர் துருவங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரே மாதிரியாக நீட் தேர்வை எழுத வேண்டும் என்பது எப்படி சரியாக இருக்கும்.
ஆமைகளும், முயல்களும் எவ்வாறு ஒரே போட்டியில் பங்கேற்க முடியும். இதில் சமவாய்ப்பு எங்கு இருக்கிறது.
The post சிபிஎஸ்இக்கு சாதகமான நீட் தேர்வை நீக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.
