மதுரை ஜி.ஹெச்சில் குடிநீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி

மதுரை: அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே கண்டியன்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (43). மனைவி தீபா (32). மகள்கள் ஆதனா (10), அகல்யா (8), மகன் ஆதிஷ் (2). அகல்யாவிற்கு கடந்தாண்டு சிறுநீரக பிரச்னை ஏற்பட்டதால், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு கடந்த 15 நாட்களாக டயாலிசிஸ் செய்யப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு டயாலிசிஸ் முடிந்ததும் அகல்யாவிற்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. உடனே தாயார் தீபா படுக்கையின் அருகில் இருந்த பாட்டிலை எடுத்து தண்ணீர் என எண்ணி கொடுத்துள்ளார். அது நோயாளிகளுக்கு பயன்படுத்தும் ஸ்பிரிட்’’ எனத் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவுக்கு சிறுமி அகல்யாவை மாற்றம் செய்து, சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.

The post மதுரை ஜி.ஹெச்சில் குடிநீர் என நினைத்து ஸ்பிரிட் குடித்த சிறுமி பலி appeared first on Dinakaran.

Related Stories: