முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..!!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. சிறப்புத் திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆய்வு நடைபெற்று வருகிறது. முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 3 முறை ஆய்வுக் கூட்டம் நடந்த நிலையில் இன்றும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்கள் தற்போது எவ்வாறு செயல்படுகிறது, திட்டங்கள் வெறும் அறிவிப்பாக இருந்துவிடக்கூடாது, செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன், எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், முத்துசாமி, மா.சுப்பிரமணியன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் திட்டங்கள் நிலை குறித்து முதல்வரிடம் எடுத்துரைக்கின்றனர். முதலமைச்சரின் முகவரி, சிறப்பு திட்டங்கள் செயலாகத்துறை உள்ளிட்ட திட்டங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

 

The post முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Related Stories: