சர்க்கியூட் பஸ்களில் 1.50 லட்சம் பேர் பயணம்

 

ஊட்டி, ஜூன் 11: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் இயக்கப்பட்ட சர்க்கியூட் பஸ்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளனர். கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளாக சர்க்கியூட் பஸ் சேவை போக்குவரத்து கழகத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது.

குறைந்த கட்டணத்தில் அனைத்து சுற்றுலா தலங்களையும் மக்கள் கண்டு ரசிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. சர்க்கியூட் பஸ்களில் பெரியவர்களுக்கு ரூ.100ம், குழந்தைகளுக்கு ரூ.50ம் கட்டணமாக வசூலிக்கப்பட்டது. இம்முறை சீசன் துவக்கத்தில் 4 பஸ்கள் இயக்கப்பட்டன. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தப்பட்ட மலர் கண்காட்சி நடந்த 5 நாட்களில் 40 பஸ்கள் வரை இயக்கப்பட்டது. தொடர்ந்து, இம்முறை பள்ளிகள் திறக்க தாமதம் ஏற்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை இருந்துக் கொண்டே இருந்ததால், தொடர்ந்து சர்க்கியூட் பஸ்கள் இயக்கப்பட்டன.

இன்று மாலை வரை இந்த சர்க்கியூட் பஸ்கள் இயக்கப்படவுள்ளது.கடந்த இரு மாதங்களில் சர்க்கியூட் பஸ்கள் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் சுற்றுலா பயணிகள் பயணித்துள்ளனர்.
இதன்மூலம், போக்குவரத்து கழகத்திற்கு ரூ.1 கோடி வரை வருவாய் கிடைத்துள்ளது. நேற்றும் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக சர்க்கீயூட் பஸ்கள் மற்றும் பார்க் அண்ட் ரெய்டு பஸ்கள் இயக்கப்பட்டன. இதில், ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து சென்றனர்.

The post சர்க்கியூட் பஸ்களில் 1.50 லட்சம் பேர் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: