விமானம் விழுந்து 40 நாட்களுக்கு பிறகு அமேசான் காட்டில் உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள்

பொகட்டா: கொலம்பியாவில் விமான விபத்து ஏற்பட்ட 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம் நடந்து உள்ளது. கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1ம் தேதி ஒற்றை இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்து உள்ளனர். இந்த நிலையில், திடீரென விமானம் விபத்தில் சிக்கியது. விமானத்தின் இன்ஜினில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், விமானி அவசரநிலையை அறிவித்து உள்ளார். இதன்பின் விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால், அதனை கண்டறிவதில் மீட்பு குழுவினருக்கு சிரமம் ஏற்பட்டது. இதில், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால், விபத்து நடந்த இடத்தில குழந்தைகளை காணவில்லை.

அவர்களை மீட்க அமேசான் வன பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. குழந்தைகள் ஓரிடத்தில் தங்காமல் தொடர்ந்து நகர்ந்து சென்றதால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், விபத்து நடந்து 40 நாட்களுக்கு பிறகு குழந்தைகள் 4 பேரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். கொலம்பியாவின் அதிபர் கஸ்டாவோ பெட்ரோ கூறும்போது, ‘இந்த குழந்தைகள் தப்பி பிழைத்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக உள்ளனர். அவர்களின் காலம் வரலாற்றில் இடம்பெறும்’ என கூறியுள்ளார். மீட்கப்பட்ட குழந்தைகளில் 11 மாத குழந்தை மற்றும் 4 வயது சிறுவனும் அடங்குவார்கள். அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

The post விமானம் விழுந்து 40 நாட்களுக்கு பிறகு அமேசான் காட்டில் உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள் appeared first on Dinakaran.

Related Stories: