பார்ட்டி கேட் விவகாரம் போரிஸ் ஜான்சன் எம்பி பதவி ராஜினாமா

லண்டன்: இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்ட்டிகேட் விவகாரம் காரணமாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், கொரோனா கால கட்டத்தில், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த குழு, போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியதை உறுதி செய்தால், 10 நாட்களோ இல்லை அதற்க அதிக காலமோ அவரை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் போரிஸ் ஜான்சன் தனது எம்பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘எனக்கு எதிரான நடவடிக்கைகளைப் பயன்படுத்தி என்னை நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றுவது உறுதியாகிவிட்டது.

குறைந்தபட்சம் கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களின் ஒப்புதல் கூட இல்லாமல், ஹாரியட் ஹெர்மன் தலைமையிலான குழு, ஜனநாயக விரோதமாக, இவ்வளவு மோசமான சார்புடன் என்னை வெளியேற்றுவதை நினைத்து திகைத்துள்ளேன். நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தினேன் என்பதற்கான ஒரு சிறிய ஆதாரத்தையும் இக்குழு வெளியிடவில்லை. ஆரம்பத்தில் இருந்தே, என்னைக் குற்றவாளியாக்குவதே அவர்களின் நோக்கமாக இருந்தது. அவர்கள் நடத்தும் விசாரணை கட்டப்பஞ்சாயத்து செய்வது போல் உள்ளது. இதனால் உடனடியாக பதவி விலகுகிறேன். இடைத்தேர்தலை சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

The post பார்ட்டி கேட் விவகாரம் போரிஸ் ஜான்சன் எம்பி பதவி ராஜினாமா appeared first on Dinakaran.

Related Stories: