7 நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்தார் பிரிட்டன் இளைஞர்..!!

பிரிட்டன்: பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஏழு நாட்களில் ஏழு உலக அதிசயங்களை நேரில் பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். ஜெமி மெக்டோனல் என்ற அவர் 6 நாட்கள் 16 மணி நேரம் 14 நிமிடங்களில் 36,700 கிலோமீட்டர் தூரம் பயணித்து புதிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.

இவரது பயணத்தில் உலக அதிசயங்களில் பட்டியலில் உள்ள சீன பெருஞ்சுவர், ஜோர்டானில் உள்ள பெட்ரா, இந்தியாவின் தாஜ்மஹால், ரோமின் கொலோசியம், பெருவில் உள்ள மச்சுபிச்சு மற்றும் ரியோடி ஜெனிரோவில் உள்ள கிறிஸ்துவின் சிலை, மெக்ஸிகோவில் உள்ள பண்டைய மாயன் நாகரிக தளமான சிச்சென் இட்ஸாவில் தனது சாதனை பயணத்தை ஜெமி நிறைவு செய்தார்.

இதன் மூலம் 7 நாடுகளில் உள்ள 7 உலக அதிசயங்களையும் மிக குறைவான நேரத்தில் நேரில் கண்டவர் என்ற கின்னஸ் சாதனையை ஜெமி மெக்டோனல் செய்துள்ளார். இந்த பயணத்திற்காக அவர் 13 விமானங்கள் 16 டாக்ஸிகள், 9 பேருந்துகள், 4 ரயில்களை அவர் பயன்படுத்தியிருக்கிறார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறமுடியாமல் அவதிப்படும் குழந்தைகளுக்கு நிதியை திரட்டுவதற்காக இந்த சாதனையை ஜெமி செய்துள்ளார்.

The post 7 நாட்களில் 7 உலக அதிசயங்களை பார்வையிட்டு கின்னஸ் சாதனை படைத்தார் பிரிட்டன் இளைஞர்..!! appeared first on Dinakaran.

Related Stories: