தமிழர் பிரச்னைக்கு தீர்வு விரைவில் சட்டத்தை உருவாக்க வேண்டும்: இலங்கை அதிபர் உத்தரவு

கொழும்பு: இலங்கையில் உள்ள தமிழர்களின் இன நல்லிணக்க பிரச்னைக்கு தீர்வு காண தேவையான சட்டத்தை விரைவாக உருவாக்குமாறு இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கே அறிவுறுத்தியுள்ளார். இலங்கை போருக்கு பின்னர் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இப்போதை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தீவிரம் காட்டி வருகிறார். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரவும், நல்லிணக்கத்திற்கான செயல்திட்டம் வகுக்கவும், அதற்கான தேசிய கொள்கையை உருவாக்கவும், தேவையான சட்டத்தை உருவாக்கவும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக சட்டம், நிறுவன நடவடிக்கைகள், காணிப்பிரச்னைகள், கைதிகள் விடுதலை, அதிகாரப் பரவலாக்கம் ஆகிய ஐந்து முக்கிய துறைகளில் முன்னேற்றம் காண அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இழப்பீடு தொடர்பான பிரச்னைகளுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க ரணில்விக்ரமசிங்கே அறிவுறுத்தி உள்ளார்.

The post தமிழர் பிரச்னைக்கு தீர்வு விரைவில் சட்டத்தை உருவாக்க வேண்டும்: இலங்கை அதிபர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: