திண்டுக்கல் ஐபிஎஸ் அதிகாரி

 

திண்டுக்கல், ஜூன் 9: பாலக்காடு மாவட்ட புதிய எஸ்பியாக திண்டுக்கல்லை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். பாலக்காடு மாவட்ட எஸ்பியாக இருந்த விஸ்வநாத் உதவி ஐஜியாக மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு பதிலாக வயநாடு மாவட்ட எஸ்பியாக உள்ள ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் அருகிலுள்ள பட்டிவீரன்பட்டி ஆகும்.

2016ம் ஆண்டு கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற ஆனந்த், வயநாடு மாவட்ட சிறப்பு படை ஏஎஸ்பி, இரிட்டி ஏஎஸ்பி, கேரள ஆயுதப்படை பிரிவு 2 கமாண்டன்ட், போலீஸ் தலைமையாக உதவி ஐஜி ஆகிய பதவிகளில் இருந்துள்ளார். வயநாடு மாவட்ட புதிய எஸ்பியாக இந்தியா ரிசர்வ் பட்டாலியன் கமாண்டன்டாக உள்ள பதம்சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

The post திண்டுக்கல் ஐபிஎஸ் அதிகாரி appeared first on Dinakaran.

Related Stories: