ஊட்டியில் வரும் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

ஊட்டி, ஜூன் 9: நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு ஊட்டியில் பிங்கர் போஸ்ட் பகுதியில் உள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகள் ஏதேனும் இருப்பின், கோரிக்கைகளை வரும் 10ம் தேதிக்குள் தோட்டக்கலை இணை இயக்குநர், தபால் பெட்டி எண் 72, ஊட்டி 643001 என்ற அலுவலக முகவரிக்கு தபாலிலோ அல்லது நேரடியாகவோ அல்லது jdhooty@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்வதால், விவசாயிகள் விவசாயம் சம்பந்தமாக குறைகள் இருப்பின், இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க சமூக இடைவெளியை பின்பற்றி இம்மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என தோட்டக்கலைத்துறை தெரிவித்துள்ளது.

The post ஊட்டியில் வரும் 23ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: