குடல் அறுவை சிகிச்சை முடிந்தது; போப் பிரான்சிஸ் நலம்

ரோம்: கத்தோலிக்க தலைமை மதகுரு போப் பிரான்சிஸ்க்கு குடல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. 86 வயதான போப் பிரான்சிஸ்க்கு ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 33செமீ பெருங்குடல் அகற்றப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் குடல் பகுதியில் வலி ஏற்பட்டதால் வாடிகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது போப் பிரான்சிஸ் நலமுடன் உள்ளதாகவும், அவர் பல நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குடல் அறுவை சிகிச்சை முடிந்தது; போப் பிரான்சிஸ் நலம் appeared first on Dinakaran.

Related Stories: