போலி கடிதம் மூலம் நுழைந்த 700 இந்திய மாணவர்களை வௌியேற்ற வேண்டாம்: கனடா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்

டொராண்டோ: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் போலியான பல்கலைக் கழக நுழைவுக் கடிதங்களுடன் கனடாவுக்கு சென்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து போலியான நுழைவுக் கடிதங்கள் மூலம் கனடா சென்ற 700 இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கான முயற்சியில் கனடா எல்லை சேவை நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 2018ம் ஆண்டு கனடா சென்ற தாங்கள், படிப்பை நிறைவு செய்து, கனடாவில் நிரந்தர குடியுரிமை பெற காத்திருக்கும் நேரத்தில் இதுபோன்ற நடவடிக்கையால் தங்கள் எதிர்காலம் பாதிக்கப்படும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கனடா எல்லை சேவை நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில், இந்திய மாணவர்களை நாடு கடத்துவதை கைவிடுமாறு எல்லை சேவை நிறுவனத்தை வலியுறுத்த கனடா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

The post போலி கடிதம் மூலம் நுழைந்த 700 இந்திய மாணவர்களை வௌியேற்ற வேண்டாம்: கனடா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: