நடப்பாண்டில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி

தஞ்சை: நடப்பாண்டில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அமைச்சர்கள், ஆட்சியர்கள் தஞ்சையில் ஆலோசனை நடத்தினர். குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், பயிர்கடன் வழங்குவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன் ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் நாளை ஆய்வு செய்ய உள்ள நிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், டப்பாண்டில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடிக்காக 4,045 டன் விதைகள் விநியோகம்; 4,046டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

யூரியா, டிஏபி போன்ற உரங்கள் 7,289 டன் கையிருப்பில் உள்ளன. சாகுபடிக்கு தேவையான 7,000 மெட்ரிக் டன் விதை நெல் இருப்பு உள்ளது என்று கூறினார். தொடர்ந்து கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த ஆண்டு ரூ.12,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். நடப்பாண்டில் ரூ.14,000 கோடியாக உயர்த்தி பயிர்க்கடன் வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

The post நடப்பாண்டில் 5 லட்சம் ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்ய இலக்கு; அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: