நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.38 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்பு..!!

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.38 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

அதன்படி இன்று (08.06.2023) நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.38 கோடி மதிப்பீட்டிலான இடம் மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம், நாகப்பட்டினம் அருள்மிகு காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 1,63,773 சதுரடி பரப்பிலான காலி மனை தனியார் பள்ளி ஒன்றிற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது.

இப்பள்ளி நிர்வாகம் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததால் சட்டப்பிரிவு 78-ன் படி நாகப்பட்டினம் இணை ஆணையர் உத்தரவின்படி, நாகப்பட்டினம் மாவட்ட உதவி ஆணையர் பி. ராணி முன்னிலையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் இன்று மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.38 கோடியாகும். இந்நிகழ்வின்போது திருக்கோயில் செயல் அலுவலர் மா.தனலட்சுமி, வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) பி.எம்.அமுதா, சிறப்பு பணி அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.

The post நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.38 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: