அமெரிக்காவில் காருக்குள் புகுந்து உணவு சாப்பிடும்போது திடீரென கதவு மூடப்பட்டதால் சிக்கித் தவித்த கரடி..!!

அமெரிக்கா: அமெரிக்காவில் காருக்குள் புகுந்து உணவு சாப்பிடும் போது கரடி ஒன்று சிக்கி கொண்ட காட்சி வெளியாகி பார்ப்போரை நகைப்புக்குள்ளாகியுள்ளது. அமெரிக்காவின் கொலராடா மாகாணத்தில் உள்ள பூங்கா அருகே வன அலுவலர்கள் காரை நிறுத்தியுள்ளனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சில கரடிகள் காருக்குள் புகுந்து உணவை தின்றுள்ளனர்.

அப்போது ஒரு காரின் கதவு மூடப்பட்ட நிலையில் அதற்குள் இருந்த கரடி வசமாக சிக்கிக் கொண்டது. பின்னர் வனத்துறை அலுவலர் ஒருவர் வந்து காரை பார்க்கும் போது அதற்குள் நாய்க்கு வைக்கப்பட்டிருந்த உணவை கரடி சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்து கொண்டிருக்கிறார்.

சிறிது நேரத்திற்கு பிறகு அவர் காரின் கதவை திறந்ததும் கரடி துள்ளிக்குதித்து ஓடிய காட்சியை செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ளார். கரடிகளுக்கு வாசனை தெரியும் என்றும் கதவுகளை திறப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ளும் என்பதால் வாகனங்களில் உணவை விட்டு செல்ல வேண்டாம் என்று பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.

The post அமெரிக்காவில் காருக்குள் புகுந்து உணவு சாப்பிடும்போது திடீரென கதவு மூடப்பட்டதால் சிக்கித் தவித்த கரடி..!! appeared first on Dinakaran.

Related Stories: