அரசு பேருந்து மீது மயில் மோதி உயிரிழப்பு

பல்லடம், ஜூன் 8: பல்லடத்தில் இருந்து புளியம்பட்டி நோக்கி சென்ற அரசு பேருந்தினை ஓட்டுநர் சக்திகுமார் மற்றும் நடத்துநர் ராஜகோபால் ஆகியோர் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றனர். பல்லடத்தை அடுத்த சின்னியகவுண்டம்பாளையம் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென எதிரே பறந்து வந்த பெண் மயில் ஒன்று பேருந்து கண்ணாடி மீது மோதி பேருந்து உள்ளே விழுந்து உயிரிழந்தது. இதில் அரசு பேருந்து கண்ணாடி முற்றிலுமாக சேதம் அடைந்தது.

பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக பயணிகளை இறக்கி விட்டுவிட்டு அரசு பேருந்தையும் உயிரிழந்த மயிலையும் ஓட்டுநர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தார். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வனத்துறை காவலர்கள் உயிரிழந்த மயிலை வடுகபாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை நடத்தி புதைத்தனர்.

The post அரசு பேருந்து மீது மயில் மோதி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: