இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ப்ளூடிக் பெற கட்டணம்: மாதம் ₹699 நிர்ணயம்

புதுடெல்லி: உலகின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க், சமூக ஊடக தளமான டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, அதில் சரிபார்க்கப்பட்ட கணக்கு சேவையான ப்ளூடிக்கை பெற கட்டணம் நிர்ணயித்தார். அதன்படி, டிவிட்டரில் ப்ளூடிக்கிற்கு மாதம் ரூ.900 வரை வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டாவும் இந்தியாவில் ப்ளூடிக்கிற்கு கட்டணம் வசூலிப்பதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘இந்தியாவில் இன்று முதல் சரிபார்க்கப்பட்ட சேவைக்கான ப்ளூடிக்கை பெறலாம். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் ஆப்களில் ப்ளூடிக் பெற மாதம் ரூ.699ம், இணையதள பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் கணக்குகளுக்கு ரூ.599ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை பெற பயனர்கள் ஏதேனும் அரசு அடையாள அட்டையை வழங்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

The post இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக்கில் ப்ளூடிக் பெற கட்டணம்: மாதம் ₹699 நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: