அடுத்தாண்டு ஜனவரி 16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

சென்னை: அடுத்தாண்டு ஜனவரி 16, 17, 18-ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். சென்னை பன்னாட்டு புத்தக காட்சி 3 நாட்கள் நடைபெற உள்ளது. சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. பன்னாட்டு புத்தகக் காட்சியை தமிழகத்தில் நடத்தவும் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி பொது நூலகத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் (பபாசி) இணைந்து, ஜன.16, 17, 18-ம் தேதிகளில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடத்தப்பட உள்ளது.

இந்த புத்தகக் காட்சி அறிவுசார்ந்த வாசிப்பை ஊக்கப்படுத்தும் நிகழ்வாக நடைபெற உள்ளது. சிறந்த தமிழ் பதிப்புகளை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க 50 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் வர உள்ளனர்.

மேலும் ஜனவரியில் நடைபெறவுள்ள புத்தக கண்காட்சியில் 40 நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் இனி வரும் ஆண்டுகளில் நூறு நாட்டவரை சேர்ந்தவர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். 2024 சென்னை பன்னாட்டு புத்தக கட்சியில் சிறப்பு விருந்தினர் நாடாக மலேசியா கவுரவிக்கப்படுகிறது. சிறந்த நூல்களை மொழி பெயர்ப்பு செய்வதற்கு ரூ.3 கோடி மானியமாக வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

The post அடுத்தாண்டு ஜனவரி 16, 17, 18ம் தேதிகளில் சென்னை பன்னாட்டு புத்தக காட்சி நடைபெறும்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: