ஸ்கூட்டரில் திடீர் தீ விபத்து

 

பாலக்காடு, ஜூன் 7: பாலக்காட்டை அடுத்த தோணியைச் சேர்ந்தவர் தென்னைமரம் ஏறும் தொழிலாளி கண்ணன் (49). இவர் வழக்கம்போல் தென்னைமரங்கள் ஏறுவதற்கு தனது ஸ்கூட்டரில் வீட்டிலிருந்து சென்றுள்ளார். அப்போது தனது நண்பரையும் ஸ்கூட்டரில் ஏற்றி அழைத்துச்சென்று கொண்டிருந்தார். பைறராம் குன்று அருகே சென்றுபோது ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி புகை எழும்பியுள்ளது.

இவற்றை பார்த்த அக்கம்பக்கத்தினர் கண்ணனிடம் தெரிவிக்க இருவரும் ஸ்கூட்டரை விட்டு இறங்கிள்ளனர். சிறுதி நேரத்தில் ஸ்கூட்டரில் தீ மளமளவென படர்ந்து ஸ்கூட்டர் தீக்கிரையாகியது. அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி அனைத்து தீயை அணைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக தென்னைமரம் ஏறும் தொழிலாளி கண்ணனும், அவரது நண்பரும் உயிர்தப்பினர்.

The post ஸ்கூட்டரில் திடீர் தீ விபத்து appeared first on Dinakaran.

Related Stories: