மூச்சு திணறி பக்தர் சாவு

 

ஈரோடு, ஜூன் 7: ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று முன்தினம் காலை 60 வயதுடைய முதியவர் சாமி கும்பிட வந்தார். அப்போது, அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து கோயிலில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், சிகிச்சைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். முதலுதவி சிகிச்சையின் போது அந்த நபர் மதுரை மாவட்டத்தை சேர்ந்த முத்து என மட்டும் தெரிவித்துள்ளார்.

The post மூச்சு திணறி பக்தர் சாவு appeared first on Dinakaran.

Related Stories: