கோத்தகிரி, ஜூன் 7: கோத்தகிரி நெடுகுளா ஊராட்சி மன்றம் சார்பில் ஜூன் 5ம் தேதி முதல் ஒரு வாரத்தகற்கு உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிப்படுகிறது. ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா சிவா தலைமையில், கோத்தகிரி ஊராட்சி மன்ற பெருந்தலைவர் ராம்குமார் முன்னிலையில்கஸ்தூரிபாய் நகர் பகுதி மற்றும் நெடுகுளா கிராமப்பகுதியில் சுற்றுச்சூழல் சூழலை பாதுகாக்கும் நோக்கில் நாவல், விக்கி, ஜகரண்டா உட்பட 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கோத்தகிரி வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரகுமாரி, நெடுகுளா ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மனோகரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராம்கோபால், ஊராட்சி செயலர் ராஜ்குமார்(பொறுப்பு), உல்லத்தட்டி வார்டு உறுப்பினர் ராஜூ, சுள்ளிகூடு வார்டு உறுப்பினர் மஞ்சுளா, கஸ்தூரிபாய் நகர் பகுதி ஊர் தலைவர் முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மரத்தினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
The post சுற்றுச்சூழல் தினத்தையொட்டி 500 மரங்கள் நடவு appeared first on Dinakaran.