உக்ரைனில் உள்ள நோவா காக்கோவ்கா அணை மீது தாக்குதல்: அருகில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது

கீவ்: உக்ரைனில் உள்ள அணையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்துள்ளது. இது திட்டமிட்ட தாக்குதல் என உக்ரைனும், ரஷ்யாவும் மாறி மாறி குற்றம் சாட்டியுள்ளனர். உக்ரைனில் கெர்ஷான் பகுதியில் அமைந்துள்ளது நோவா காக்கோவ்கா. 30 மீட்டர் உயரம் உள்ள 3.2 கிலோ மீட்டர் நீளத்துக்கு உள்ள இந்த அணை 1956-ம் ஆண்டு சோவியத் காலகட்டத்தில் கட்டப்பட்டது. இந்த அணையின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அணை மதகுகள் வெடிவைத்து சிதறும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

அணையிலிருந்து பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் வெளியேறி வருகிறது. குறிப்பாக ரஷ்யா ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இருக்கும் பல நீரில் மூழ்கியுள்ளன. அணைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த அணை கிருமியாவுக்கும், அங்குள்ள ரஷ்யா வின் சபோரிஷியா அணு ஆலைக்கும் முக்கியமான நீர் ஆதாரமாக உள்ளது. இந்நிலையில், அணு ஆலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக சர்வதேச அணு சக்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யா திட்டமிட்டு அணை மீது தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது உக்ரைனின் சதி செயல் என ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

 

The post உக்ரைனில் உள்ள நோவா காக்கோவ்கா அணை மீது தாக்குதல்: அருகில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: