உக்ரைனின் பயங்கர தாக்குதல் முறியடிப்பு: 250 வீரர்களை கொன்றதாக ரஷ்யா அறிவிப்பு

கீவ்: ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட 2 மாகாணங்கள் மீது உக்ரைன் நடத்திய தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 250 உக்ரைன் வீரர்கள் பலியாகி விட்டனர். உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றது. பதிலுக்கு உக்ரைனும் தனது பலத்தை காட்டி வருகின்றது. இந்நிலையில் சட்டவிரோதமாக மாஸ்கோவுடன் இணைக்கப்பட்ட 2 மாகாணங்களில் நேற்று முன்தினம் உக்ரைன் பயங்கர தாக்குதலை முன்னெடுத்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ரஷ்யா அதிகாரிகள் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. தெற்கு உக்ரைனின் டொனெஸ்டிக் மாகாணத்தில் உக்ரைனின் தாக்குதலை ரஷ்ய படைகள் பின்னுக்கு தள்ளியுள்ளது. ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் கூறுகையில், ‘‘எதிரியின் குறிக்கோள் எங்களது பாதுகாப்பை உடைப்பதாகும். ஆனால் அவர்களால் அந்த இலக்கை அடைய முடியவில்லை. அது வெற்றி பெறவில்லை. தாக்குதலில் 250 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டனர். 16 பீரங்கிகள், 3 தாக்குதல் வாகனங்கள் மற்றும் 21 கவச போர் வாகனங்கள் அழிக்கப்பட்டது” என்றார்.

The post உக்ரைனின் பயங்கர தாக்குதல் முறியடிப்பு: 250 வீரர்களை கொன்றதாக ரஷ்யா அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: