துபாய் தப்பி செல்ல முயன்ற மம்தாவின் உறவினர் தடுத்து நிறுத்தம்

கொல்கத்தா: துபாய் தப்பிச் செல்ல முயன்ற முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர் ருஜிராவை அமலாக்கத்துறையினர் தடுத்து நிறுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜிரா, இன்று துபாய் செல்வதற்காக கொல்கத்தாவின் டாம்டாம் விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவர் அமலாக்கத்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். ஏற்கனவே இவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றதால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாக அமலாக்க துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நிலக்கரி ஊழல் வழக்கில் ருஜிராவுக்கும் தொடர்பு உள்ளது. அவர் தனது குழந்தைகளுடன் துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றார். அதையடுத்து அவர் டாம்டாம் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார்’ என்றார். ஏற்கனவே கடந்தாண்டு செப்டம்பரில் அபிஷேக் பானர்ஜியின் உறவினர் மேனகா கம்பீர் என்பவர் கொல்கத்தா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post துபாய் தப்பி செல்ல முயன்ற மம்தாவின் உறவினர் தடுத்து நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: