டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து..!

டெல்லி: டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தலைமையகத்தில் ஏற்பட்டுள்ள தீயினை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பவனில் இன்று காலை 10:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் தரை தளத்தில் இருந்து பரவிய தீயானது, மேல் தளங்களுக்கும் பரவி விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள சர்வர் அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும், தீ விபத்தால் பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சர்வர் அறையில் தீ விபத்து ஏற்பட்டு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேரு பவன் டெல்லியில் அமைந்துள்ள அரசு அலுவலக கட்டிடம். இந்த கட்டிடத்தில் வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகம் உள்பட பல அரசு துறைகளின் அலுவலகங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

“சர்வர் அறையில் தீ விபத்து ஏற்பட்டது மற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு பொருத்தப்பட்ட மின் மீட்டரில் தீப்பிடித்தது” என்று டெல்லி தீயணைப்பு சேவை அதிகாரி தெரிவித்துள்ளார். முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை, டெல்லி ஜஹாங்கிர்புரியில் உள்ள குடிசைப் பகுதியில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் தீ விபத்து..! appeared first on Dinakaran.

Related Stories: