பொள்ளாச்சி : பொள்ளாச்சி தடகள சங்கம் மற்றும் ரோட்டரி சங்கம் மூலம், தமிழ்நாடு பல் மருத்துவ சங்கம் சார்பில் உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் பேட்டி நேற்று நடைபெற்றது. பல் மருத்துவ சங்க தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். செயலாளர் ராஜமோகன், ஒருங்கிணைப்பாளர் தலைவர் கவிதா அருண், செயலாளர் ஹரி, டாக்டர் பரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகாலிங்கபுரம் ரவுண்டானாவிலிருந்து துவங்கிய இப்போட்டி, பல்லடம் ரோடு புளியம்பட்டி கிராமத்தில் உள்ள பிஏ கல்லூரி வரை நடைபெற்றது. இதில், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 13 வயது முதல் 18 வயது வரை, 19 வயதுக்கு மேல் முதியவர் வரை என 3 பிரிவுகளில் தனித்தனியாக நடந்த போட்டியில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்றனர். போட்டி நிறைவில், வெவ்வேறு பிரிவுகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசு மற்றும் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற சிறுவர் முதல் முதியவர்கள் வரை என அனைவருக்கும் சான்றுகளும் வழங்கப்பட்டது.
The post உலக புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் appeared first on Dinakaran.