கொழிஞ்சாம்பாறை கிராமத்திலிருந்து விமானத்தில் பெங்களூர் பறந்த பெண் தூய்மை பணியாளர்கள்

 

பாலக்காடு,ஜூன் 5: பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை கிராமப் பஞ்சாயத்து தூய்மைப்பணியாளர்கள் 25 பேர் விமானம் மூலம் பெங்களூருக்கு சுற்றுலா சென்றனர்.
கொழிஞ்சாம்பாறை கிராமப்பஞ்சாயத்தில் வீடுகள் தோறும் சென்று குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் ஆகியவை சேகரித்து வருகின்ற தூய்மை பணியாளர்கள் தங்களின் சம்பளத்தில் ஒரு சிறுதொகை ஒதுக்கீடு செய்து தலா ரூ.4200 சேமித்தனர். இவர்களில் 25 பேர் விமானத்தில் இன்ப சுற்றுலா செல்லத் திட்டமிட்டனர். நேற்று காலை கொச்சி நெடும்பாசேரி விமான நிலையத்திலிருந்து காலை 6.45 க்கு புறப்படுகிற விமானத்தில் பெங்களூர் புறப்பட்டு சென்றதோடு, அங்குள்ள லால்பாக்,பெங்களூரூ பாலஸ்,மாஜிஸ்டிக் ஷாப்பிங் ஆகிய இடங்களை சுற்றி பார்த்த பின் இன்று இரவு ஊர் திரும்புகிறார்கள.

இவர்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.பி.ராஜேஷ், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் பினுமோள் ஆகியோர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.ஐ.ஆர்.டி.சி., துணை ஒருங்கிணைப்பாளர் நிஷாசஜித் இவர்களின் பயணத்திற்கு தலைமை தாங்குகிறார்.கிராமபஞ்சாயத்துத் தலைவர் சதீஷ்,வார்டு உறுப்பினர்கள்,பஞ்சாயத்து அதிகாரிகள் உல்லாசப்பயணத்திற்கு அனைத்து தரப்பிலான உதவிகள் செய்ததோடு, வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். கேரளாவிலே முதன்முறையாக தூய்மை பணியாளர் மகளிர் குழுவினர் விமான ம்மூலமாக சுற்றுலா செல்வது என்பது பெருமைக்குரிய விஷயமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொழிஞ்சாம்பாறை கிராமத்திலிருந்து விமானத்தில் பெங்களூர் பறந்த பெண் தூய்மை பணியாளர்கள் appeared first on Dinakaran.

Related Stories: