இந்தியா-பாக். பேச்சுவார்த்தையின்றி காஷ்மீர் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது: பரூக் அப்துல்லா பேட்டி

நகர்: இந்தியா-பாக். பேச்சுவார்த்தை நடத்தாமல் காஷ்மீர் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என்று பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியாவின் மூன்றாவது ஜி 20 சுற்றுலா பணிக்குழு கூட்டம் ஜம்மு காஷ்மீரின் கோடைகால தலைநகரான நகரில் கடந்த மாதம் 22-24 தேதிகளில் நடந்தது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான பரூக் அப்துல்லா நகரில் பத்திரிகையாளர்களை நேற்று சந்தித்தார்.
அப்போது அவரிடம், “நகரில் நடந்த ஜி-20 கூட்டம் காஷ்மீருக்கு பலனளிக்குமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர், “வெளிநாட்டில் இருந்து வருகை தரும் சுற்றுலா பயணிகளால் நமக்கு பலன் கிடைக்குமா? காஷ்மீரின் சூழல் மேம்படும் வரை அது நிச்சயமாக கிடையாது. இந்தியா-பாகிஸ்தான் இணைந்து காஷ்மீர் குறித்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால், சூழல் மேம்படாது,” என்று தெரிவித்தார்.

The post இந்தியா-பாக். பேச்சுவார்த்தையின்றி காஷ்மீர் விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது: பரூக் அப்துல்லா பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: