அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில் வெற்றி வாகை சூடினார் இந்திய வம்சாவளி சிறுவன்; கடினமான வார்த்தையை சரியாக உச்சரித்து சாதனை..ரூ.38 லட்சம் பரிசு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரு கோடியே 10 லட்சம் பேர் பங்கேற்ற ஸ்பெல்லிங் பீ எனப்படும் ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடித்து சரியாக உச்சரிக்கும் போட்டியில் இந்திய வம்சாவளி சிறுவன் தேவ்ஷா வெற்றிபெற்று அசத்தியிருக்கிறார். 2023ம் ஆண்டுக்கான தேசிய ஸ்பெல்லிங் பீ போட்டி அமெரிக்காவில் நடைபெற்றது. பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஒரு கோடியே 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.

இதில் 11 பேர் இறுதிசுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டனர். புளோரிடாவில் நடைபெற்ற இறுதி போட்டியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 14 வயது சிறுவன் தேவ்ஷா வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். முதலிடம் பெற்ற தேவ்ஷாவுக்கு வெற்றி கோப்பையுடன் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 38 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. ஸ்பெல்லிங் பீ 2023 போட்டியில் வெர்ஜீனியாவை சேர்ந்த சார்லோட் வால் 2ம் பரிசினை வென்றுள்ளார்.

The post அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டியில் வெற்றி வாகை சூடினார் இந்திய வம்சாவளி சிறுவன்; கடினமான வார்த்தையை சரியாக உச்சரித்து சாதனை..ரூ.38 லட்சம் பரிசு..!! appeared first on Dinakaran.

Related Stories: