சுற்றுலா பயணிகள் வீசி சென்றதால் ஊட்டி நகரில் குவிந்த குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர்

 

ஊட்டி, ஜூன் 2: கோடை சீசனை முன்னிட்டு வருகை தந்த சுற்றுலா பயணிகள் வீசி சென்றதால் ஊட்டி கால்ப் கிளப் சாலை, பிங்கர் போஸ்ட், எச்பிஎப் பகுதிகளில் குவிந்த குப்பைகளை நகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றினர். கோடை சீசனை முன்னிட்டு ஊட்டிக்கு கடந்த 2 மாதங்களாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர். தற்ேபாது கோடை சீசன் நிறைவடைந்த நிலையில், தற்போதும் பயணிகள் வருகை உள்ளது.

ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகள் தங்களுடன் பிளாஸ்டிக் பொருட்கள், உணவு பொருட்களை எடுத்து வருகின்றனர். அவற்றை பயன்படுத்தி விட்டு சாலை மற்றும் முக்கியமான பொது இடங்களில் வீசி சென்று விடுகின்றனர். ஊட்டியில் உள்ள ஒட்டல்களில் உணவு பொருட்களின் விலை அதிகமாக இருப்பதால் சமவெளி பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் வீட்டிலேயே உணவு சமைத்து கொண்டு வந்து விடுகின்றனர். அவற்றை சாலை ஒரங்களில் வாகனங்களை நிறுத்தி சாப்பிட்டு விட்டு மீதமான உணவுகளை கொட்டிவிட்டு சென்று விடுகின்றனர்.

The post சுற்றுலா பயணிகள் வீசி சென்றதால் ஊட்டி நகரில் குவிந்த குப்பைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர் appeared first on Dinakaran.

Related Stories: