ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிம்மின் உடல் எடை கணிப்பு: வடகொரியா அதிபரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல்

பியோங்யாங்: ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் உதவியுடன் வடகொரிய அதிபர் கிம்மின் உடல் எடையை கணித்துள்ள தென்கொரியா அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளது. வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனிப்பட்ட தகவல்கள் குறித்து அந்நாட்டு அரசு தொடர்ந்து ரகசியம் காத்து வருகிறது. இந்நிலையில் அவரது உடல்நிலை குறித்து தென்கொரியா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணிதத்தின் படி கிம்மின் உடல் எடை 140 கிலோ வரை இருக்கும் என தென்கொரியா தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக புகையிலை, சிகரெட், நொறுக்குத்தீனிகள் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்துள்ள தென்கொரியா குடிப்பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம், ஒழுங்கற்ற உணவு பழக்கத்திற்கு கிம் அடிமையாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கிம்மிற்கு 39 வயதாகும் நிலையில் அவர் உட்பட வடகொரியாவின் பல அரசு அதிகாரிகள் தூக்கமின்மை காரணமாக அவதிப்பட்டு வருவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

The post ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிம்மின் உடல் எடை கணிப்பு: வடகொரியா அதிபரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: