கோவை மண்டல எஸ்பி நெல் குடோனில் ஆய்வு

தர்மபுரி, ஜூன் 1: தமிழக குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் துறை கோவை மண்டல எஸ்பி பாலாஜி, சேலம் சரக டிஎஸ்பி விஜயகுமார் ஆகியோர், நேற்று தர்மபுரிக்கு வந்தனர். அவர்கள் அதியமான்கோட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கில் உள்ள நெல்மூட்டைகளை ஆய்வு செய்தனர். பின்னர், அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். ஏற்கனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் விஜிலென்ஸ் விழிப்புணர்வு அலுவலர் லோகநாதன் தலைமையிலான, துணை மேலாளர் கமலக்கண்ணன் மற்றும் கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர், நெல் மூட்டை அட்டிகளை கணக்கெடுத்ததில் அட்டி கணக்கு சரியாக உள்ளதாகவும், அட்டிகளில் உள்ள மூட்டைகளின் எண்ணிக்கையில் ஒருசில அட்டிகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு கூடுதலாகவும், ஒருசில அட்டிகளில் குறைவாகவும் மூட்டைகள் உள்ளது என தெரிவித்தனர்.

The post கோவை மண்டல எஸ்பி நெல் குடோனில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: