தென் சீன கடலில் அமெரிக்க உளவு விமானத்தை ஒட்டி பறந்த சீன போர் விமானம்

வாஷிங்டன்: தென் சீன கடல் பகுதியில் அமெரிக்காவின் உளவு விமானத்தை ஒட்டி சீன போர் விமானம் சீறி பாய்ந்து சென்றதாக அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. தென் சீன கடலில் சர்வதேச பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்களை ஒட்டி பறந்து ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் சீனா ராணுவம் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா புகார் தெரிவித்துள்ளது.

இது குறித்து, அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கமாண்டர் கூறிய போது, “தென் சீனக் கடல் பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் ஆர்சி-135 ரக போர் விமானத்தின் முன் பகுதியை ஒட்டி உரசியபடி சீனாவின் ஜே-16 போர் விமானம் பறந்து சென்றது.இதனால் அமெரிக்க போர் விமானத்தின் விமானிகள் கொந்தளிப்பான சூழலில் பறக்க வேண்டியுள்ளது. சீனாவின் திட்டமிட்ட இந்த நடவடிக்கை தேவையற்றது,” என்று தெரிவித்தார்.

The post தென் சீன கடலில் அமெரிக்க உளவு விமானத்தை ஒட்டி பறந்த சீன போர் விமானம் appeared first on Dinakaran.

Related Stories: