சென்னை: மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பதவிப்பிரமாணம் எடுத்த சில நாட்களுக்குள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பார்க்கும் காரியத்தை சிவகுமார் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. மேகதாது பற்றிய முழு விவரத்தை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அதிகாரிகள் சொல்லியிருக்கமாட்டார்கள் என்று கருதுகிறேன். மேகதாதுவோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனை பாதிக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
The post மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிர்க்கும்: அமைச்சர் துரைமுருகன் சாடல் appeared first on Dinakaran.