மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஏதுவாக சூடானில் மேலும் ஒரு வார காலம் சண்டை நிறுத்த ஒப்பந்தம்!!

சூடான் : உள்நாட்டு போர் நடைபெற்று வரும் சூடானில் மேலும் ஒரு வரை சண்டை நிறுத்தம் செய்ய அந்நாட்டு ராணுவமும், துணை ராணுவ படையும் ஒப்புக் கொண்டுள்ளன. வடகிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் ராணுவத்திற்கும் அதிவிரைவு துணை ராணுவ படையினருக்கும் ஏப்ரல் 15ம் தேதி முதல் சண்டை நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிரான துணை ராணுவ படையினர் திடீரென போர்க்கொடி தூங்கியதால் இந்த மோதல் வெடித்தது. கடந்த 1.5 மாதங்களாக ஏற்பட்டு வரும் மோதலில் 836 பேர் கொல்லப்பட்டனர்.

10 லட்ச பொதுமக்கள் நாட்டை விட்டே வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். சூடானில் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்யும் பொருட்டு அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் சமரச முயற்சிகளை செய்து வருகின்றன. ஏற்கனவே இந்த மாதம் 22ம் தேதி முதல் 7 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நேற்று மேலும் 5 நாட்கள் சண்டை நிறுத்தம் செய்து கொள்ள சூடான் ராணுவமும் துணை ராணுவ படையும் ஒப்புக்கொண்டுள்ளன. இதனால் துப்பாக்கிச் சத்தம் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.

The post மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ள ஏதுவாக சூடானில் மேலும் ஒரு வார காலம் சண்டை நிறுத்த ஒப்பந்தம்!! appeared first on Dinakaran.

Related Stories: