சிங்கம்புணரியில் ஒன்றியக்குழு கூட்டம்

 

சிங்கம்புணரி, மே 31: சிங்கம்புணரியில் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், சாதாரண ஒன்றியக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றியக் குழு தலைவர் திவ்யா பிரபு தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிளை ஊராட்சி லட்சுமண ராஜு முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் செலவினங்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

இதில் ஏரியூர், வடவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த மின்னழுத்தம் நிலவுவதாக கவுன்சிலர்கள் சிலர் புகார் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் துணைத் தலைவர் சரண்யா, கவுன்சிலர்கள் ரம்யா, உமா, சத்தியமூர்த்தி, உதயசூரியன், பெரியகருப்பி, இளங்குமார், சசிக்குமார் மற்றும் அலுவலகப் பணியாளர்கள், பிற துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சிங்கம்புணரியில் ஒன்றியக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: