சேரங்கோடு ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை: தொற்று பரவும் அபாயம்

 

பந்தலூர், மே 31: பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியில்தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள 15 வார்டுகளில் சேகரமாகும் குப்பைகளை எருமாடு இன்கோநகர் பகுதியில் கொட்டி வந்தனர். குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதால் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டுவதாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் அப்பகுதியில் குப்பை கொட்டுவதை நிறுத்தியுள்ளனர்.

பந்தலூர் தாசில்தார் நடேசன் தலைமையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் இன்கோநகர் மக்கள் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தி மாற்று இடத்தில் குப்பை கொட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும் என தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக குப்பை கொட்டுவதற்கு மாற்று இடம் தேர்வு செய்யும் பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதால் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் குப்பை தேங்கி கிடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இதனால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேரங்கோடு ஊராட்சி நிர்வாகம் உடனடியாக மாற்று இடம் தேர்வு செய்து தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சேரங்கோடு ஊராட்சியில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற கோரிக்கை: தொற்று பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: